![]() |
ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 |
2016 ஹார்லி டேவிட்சன் ஐயன் 883
புதிய ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 பைக்கில் முன்புறத்தில் புதிய சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்திலும் புதிய அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய இலகு எடை கொண்ட மேக் வீல் மற்றும் இருக்கையின் சொகுசுதன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2016 ஹார்லி டேவிட்சன் ஃபார்ட்டி எயிட்
புதிய ஹார்லி டேவிட்சன் ஃபார்ட்டி எயிட் பைக்கில் முன்புறத்தில் புதிய 49மிமீ ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்திலும் புதிய அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய இலகு எடை கொண்ட மேக் வீல் மற்றும் பழமையான தோற்றத்தில் கருப்பு மற்றும் குரோம் பூச்சினை பெற்றுள்ளது.
ஹார்லி டேவிட்சன் ஃபார்ட்டி எயிட் |
புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750
2016 ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750 பைக்கில் முற்றிலும் புதிய முன் மற்றும் பின்புற பிரேக் அமைப்பினை பெற்றுள்ளது.
ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750 |
2016 ஹார்லி டேவிட்சன் ஹெரிடேஜ் சாஃப்ட்டெயில் கிளாசிக்
ஹார்லி டேவிட்சன் சாஃப்ட்டெயில் கிளாசிக் பைக்கில் தோற்றம் மட்டுமல்லாமல் புதிய பவர்ட்ரெயின் மற்றும் 103 ட்வீன் கேம் என்ஜின் ஆற்றல் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரானிக் க்ரூஸ் கட்டுப்பாடு போன்றவை உள்ளது.
ஹார்லி டேவிட்சன் சாஃப்ட்டெயில் கிளாசிக் |
புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டெர் மாடலும் முன் மற்றும் பின்புற சஸ்பென்ஷன்கள் புதுப்பிக்கப்பட்டு இருக்கையின் சொகுசு தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வரும் ரோட் கிங்
ஹார்லி டேவிட்சன் ரோட் கிங் டூரிங் ரக மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்த பைக்கில் சிறப்பான ஆற்றலை வழங்கும் ட்வீன் கேம் 103 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
ஹார்லி டேவிட்சன் ரோட் கிங் |
2016 Harley-Davidson lineup Updated and also Road King return