இந்தியாவில் ஸ்கோடா ஆக்டாவியா செடான் காரில் சைல்டு லாக்கில் ஏற்பட்டுள்ள பழுதினை நீக்கி தரும் நோக்கில் 539 ஆக்டாவியா கார்களை திரும்ப அழைத்துள்ளது. எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் இலவசமாக மாற்றி தரப்பட உள்ளது.
ஸ்கோடா வெளியிட்டுள்ள அறிக்கையில் நவம்பர் 2015 முதல் ஏப்ரல் 2016 இடையிலான காலகட்டத்தில் தயாரிக்கபட்ட ஆக்டாவியா கார்களின் பின்புற இருபக்க கதவுகளிலும் உள்ள மெனுவல் சைல்டு லாக் பிரச்சனையை சோதனை செய்ய 12 நிமிடங்கள் எடுத்து கொள்ளப்படும் லாக்பாதிப்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டால் 45 நிமிடங்களில் சரிசெய்துதரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா டீலர்கள் வாயிலாக பாதிகப்பபட்ட வாகன உரிமையாளர்களுக்கு நேரடியாக அழைப்புகள் விடுக்கப்பட உள்ளது. எவ்விதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாமல் இலவசமாக மாற்றப்பட உள்ளது.