வால்வோ நிறுவனம் சொகுசு பேருந்துகளை மட்டும் விற்பனை செய்து வருகின்றது. இந்த சொகுசு பேருந்துகள் ரூ 70 இலட்சத்திற்க்கு மேல் விலை உள்ளவை ஆகும்.
இதனால் பலதரபட்ட வாடிக்கையாளர்களை கவரமுடியவில்லை. எனவே தன்னுடைய சந்தையின் அளவை விரிவுபடுத்த குறைந்த விலையில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 50,000 பேருந்துகளுக்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது. இவற்றில் ரூ 15-20 இலட்சத்திற்க்குள் விலை உள்ள பேருந்துகளே அதிகம்.
தற்பொழுது ரூ 400 கோடி முதலீட்டில் பெங்களூரில் உள்ள ஆலையை விரிவுப்படுத்த உள்ளது. மேலும் புதிய பேருந்துகளை உருவாக்க உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 1800 பேருந்துகளை தயாரித்து வரும் வால்வோ அடுத்த ஆண்டு முதல் 2500 பேருந்துகளாக அதிகரிக்கும்.2015-2016 ஆம் ஆண்டுக்குள் 5000 பேருந்துகளை தயாரிக்க உள்ளனர்.
இந்த புதிய பிராண்டு மூலம் அசோக் லைலேன்ட் ,டாடா போன்ற நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும்.