லேண்ட்ரோவர் நிறுவனம் இங்கிலாந்தினை தலைமையிடமாக கொண்டு 1948 ஆம் ஆண்டு தொடங்கபட்டது. நேற்றுடன் (ஏப்ரல் 30) லேண்ட்ரோவர் 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
லேண்டரோவர் கடந்த 2008 முதல் டாடா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது. ஹியூ 166 (HUE 166)என்ற பெயரில் கேக் வைத்து கொண்டாடியுள்ளது. லேண்ட் ரோவர் 1 சீரிஸ் காரினை நினைவுப்படுத்தும் வகையில் இந்த பெயரினை வைத்துள்ளது.
இந்த கேக் ராயல் நேவியின் லினஸ் ஹெலிக்பட்டரில் கொண்டு வரப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் காட்சி வைக்கப்பட்டிருந்தது.
65வது கொண்டாட்டத்தை இந்தியாவிலும் கொண்டாட உள்ளது. இதற்க்காக வருகிற மே 3யில் ஆம்பி வேலியில் லேண்ட்ரோவர் எக்ஸ்பிரியன்ஸ் நிகழ்வினை நடத்த உள்ளது. இந்த நிகழ்வில் ஆல்-டெரரின் அனுபவத்தினை பெற முடியும்.
மேலும் டிஃபென்டரில் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்டுள்ளது. டிஃபென்டர் எல்எக்ஸ்வி என்ற பெயரில் கொண்டாட்ட எடிசனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் 24 லட்சம் ஆகும்.