ஃபெராரி நிறுவனத்தின் முதல் ஹைபிரிட் காராகும். லா ஃபெராரி அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் 950பிஎச்பி ஆகும்.
இதில் V வடிவமைப்பில் 12 சிலிண்டர் 6.3 லிட்டர் எஞ்சின் பயன்படுத்திள்ளனர். எஞ்சின் வெளிப்படுத்தும் ஆற்றல் 789பிஎச்பி ஆகும். மேலும் கூடுதலாக இனைக்கப்பட்டுள்ள 120கீலோவாட் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் வெளிப்படுத்தும் ஆற்றல் 161பிஎச்பி ஆகும். இவற்றின் மொத்த ஆற்றலே 950பிஎச்பி ஆகும். 7 ஸ்பீடு டுவல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த எஞ்சின் ஃஎப் 12 பெர்லினெட்டாவின் மேம்படுத்தப்பட்டதாகும்
லா ஃபெராரி காரின் உச்சக்கட்ட வேகம் மணிக்கு 350 கீமி க்கு மேல் கிடைக்கும்.
3 விநாடிகளில் 100kmph தொடும்.
7 விநாடிகளில் 200kmph தொடும்
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஹைபிரிட் அம்சத்தை ஃபெராரி HY-KERS என்று அழைக்கின்றது. இந்த நுட்பமானது பார்முலா பந்தயங்களில் பயன்படுத்தும் தொழில்நுட்பமாகும். இதனை மேக்ன்டி மார்லி வல்லுஞர்களை கொண்டு தயாரித்துள்ளது.
இந்த காரின் பாடியானது 4 வகையான பாடி கார்பன் பைப்ரை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.லாஃபெராரி கார்கள் சில விற்க்கப்பட்டுள்ளன.
லாஃபெராரி காரின் விலை ரூ 9.29 கோடியாகும். 499 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.