லம்போர்கினி கல்லர்டோ காருக்கு மாற்றாக லம்போ கப்ரேரா வெளிவர உள்ளதாக கார்பஸ் தளம் சில ஊக படங்களை வெளியிட்டுள்ளது. 2003 முதல் விற்பனையில் உள்ள கல்லர்டோ மிக சிறப்பான வெற்றி பெற்ற காராக வலம் வருகின்றது.
மிக குறைவான எடை கொண்ட கார்பன் ஃபைபர்களால் இந்த கார் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 5.2 லிட்டர் வி10 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 600எச்பி வரை இருக்கலாம்.
இந்த வருட செப்டம்பரில் நடைபெறவுள்ள ஃபிரான்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் காட்சி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த வருடம் உற்பத்தி தொடங்கலாம்.