கடந்த 2012ம் ஆண்டில் கான்செப்ட் மாடலாக காட்சிக்கு வந்த உரஸ் எஸ்யூவி தற்பொழுது இத்தாலியில் உள்ள லம்போர்கினியின் சான்ட் அகட போலோக்னெஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செயப்படுவது உறுதியாகியுள்ளது. இதற்கு 80,000 ச.மீ உள்ள ஆலையை 1,50,000 ச.மீ ஆக உயர்த்த உள்ளனர். மேலும் 500 பணியாளர்களை புதிதாக வேலைக்கு சேர்க்க உள்ளனர். ஆண்டுக்கு 3000 எஸ்யூவி கார்கள் வடிவமைக்க உள்ளனர்.
உரஸ் எஸ்யூவி ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் MLB evo தளத்தில் உருவாக்கப்பட உள்ளதால் மிக வலுவான கார்பன் ஃபைபர் பாடியை கொண்டிருக்கும். இந்த தளத்தில் உருவாக்கப்படும் மற்ற எஸ்யூவிகள் புதிய ஆடி Q7 , வரவிருக்கும் பென்ட்லி பென்டகையா , புதிய தலைமுறை போர்ஷே கேயேன் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டூர்ங் ஆகும்.
புதிய உரஸ் எஸ்யூவி லம்போர்கினி வரலாற்றில் புதிய சகாப்தத்தை தொடங்கும் என லம்போர்கினி தலைமை செய்ல்அதிகாரி ஸ்டீபன் வீங்கில்மென் தெரிவித்துள்ளார்.
மேலும் லம்போர்கினி எஸ்யூவி பற்றி படிக்க உரஸ் எஸ்யூவி