ஆட்டோமேட்டிக் கியர்பாகஸை விட விலை குறைவான ஈசி – ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் தான் சோதனை ஓட்டத்தில் உள்ளது. 110பிஎஸ் டாப் வேரியண்டில் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெறலாம். ஏஎம்டி ஆப்ஷன் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை விட குறைவாகவும் டியூவி300 காருக்கு இணையான விலையிலும் இருக்கலாம்.
புதிய டஸ்ட்டர் காரில் முகப்பு , பின்பக்கம் , புதிய அலாய் வீல் போன்றவை புதுப்பிக்கப்பட்டிருக்கும். மேலும் உட்புறத்தில் மீடியா நேவ் பேக் அதிக வேரியண்டிலும் மற்றும் டிசைன் மேம்படுத்தப்பட்டிருக்கும்
அதேபோல மேம்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி காரின் விலை பெரிதாக அதிகரிக்காது என தெரிகின்றது. டஸ்ட்டர் காரின் பாகங்கள் 70 சதவீதம் வரை உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனை 80 சதவீத அளவிற்க்கு ரெனோ உயர்த்த திட்டமிட்டுள்ளதால் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்பதனால் போட்டியாளர்களுடன் எளிதாக போட்டியிடும் வகையில் இருக்கும்.
98 சதவீத பாகங்கள் உள்நாட்டிலே தயாரிக்கப்படுவதனால் ரெனோ க்விட் கார் குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது போலவே டஸ்ட்டர் காரும் எதிர்காலத்தில் தயாரிக்கப்படலாம்.
சென்னையில் புதிய டஸ்ட்டர் கார் சோதனை ஓட்டத்தில் உள்ளது. அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் சந்தைக்கு வரலாம்.
புதிய ரெனோ டஸ்ட்டர் பிரேசில் |
Renault Duster Facelift to Get AMT option