ரூ.2.56 லட்சத்தில் விற்பனைக்கு வந்த ரெனோ க்விட் சிறப்பான தோற்றம் மற்றும் நவீன அம்சங்களுடன் வந்துள்ளதால் ஆல்ட்டோ 800 மற்றும் இயான் போன்ற கார்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தியுள்ளது.
57எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 800சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 74என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள க்விட் கார் இதுவரை 25,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை கடந்துள்ளது. முதற்கட்ட நகரங்களில் டெலிவரி தொடங்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட நகரங்களில் அடுத்த வாரத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க ; ரெனால்ட் க்விட் கார் சென்னை ஆன்ரோடு விலை
தற்பொழுது ரெனோ க்விட் காரை முன்பதிவு செய்தால் ஜனவரி மாதம் வரை காத்திருக்க வேண்டி இருக்கும் என கூறப்படுகின்றது. இதனால் ரெனால்ட் நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Renault Kwid waiting period up to three months