மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி காரில் புதிய மஹிந்திரா SLE 4×4 வகையை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வகையில் சில பாதுகாப்பு அம்சங்களை சேர்த்துள்ளது. இதன் விலை 10.72 இலட்சம் ஆகும்.
LX, VLX மற்றும் VLX AT 4×4 போன்ற வேரியன்ட்களில் புதிதாக இதனையும் இனைத்துள்ளது. LX 4×4(Rs 9.66 இலட்சம்) மற்றும் VLX AT 4×4(Rs 11.81 இலட்சம்) என இரண்டு வகைகளுக்கு மத்தியில் இந்த புதிய SLE 4×4 (Rs 10.72 இலட்சம்) வகையை வெளியிட்டுள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ SLE 4×4
SLE 4×4 காரில் சில பாதுகாப்பு வசதிகளை அதிகரித்துள்ளது.அவை ABS, வாய்ஸ் அசிஸ்ட் அமைப்பு, எலெக்ட்ரிக் மூலம் இயங்கும் ORVMs, ஃப்ரென்ட் ஃபோக் விளக்குகள், கலர் க்ளாடீங், ரியர் வாஸ் வைப்பர், இன்னும் பல வசதிகளை கொடுத்துள்ளது.
என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. 2.2 லிட்டர் 4 சிலிண்டர் எம்-ஹவாக் டீசல் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் சக்தி 120 HP.
மஹிந்திரா ஸ்கார்பியோ SLE 4×4 `விலை 10.72 இலட்சம்(ex-showroom Bangalore).