நிசான் இந்தியா நிறுவனம், ரூட்ஸ் ஆப் டிசைன் என்ற திட்டத்தை சென்னை அண்ணா நகர் காம்ப்ஸ்சில் உள்ள சென்னை ஸ்கூலில் அறிமுகம் செய்துள்ளது துபாய், பாங்காக், சிங்கப்பூர் மற்றும் பூஜிங் பள்ளிகள் இந்த திட்டத்தை வெற்றிகரமாக அறிமுகம் செய்த ஜப்பான் கார்தயாரிப்பு நிறுவனமான நிசான் நிறுவனம், முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
உலகளவில் உள்ள குழந்தைகள் தங்கள் ஆர்ஸ், டிசைன் மற்றும் கிரியேட்டிவிட்டி போன்றவற்றை வெளிகொண்டு வரும் நோக்கில் இந்த திட்டத்தை நிசான் மோட்டார் கார்ப்பரேஷன் உயர் அதிகாரி அல்போன்சா அல்பைசா தொடங்கினார்.
இந்த திட்டம் குறித்து பேசிய அல்பைசா, உலகம் வேகமாக மாறி வருகிறது அதனால் ஆட்டோ தொழில்துறையும் வேகமாக மாறி வருகிறது. நாம் வாழும் நகரங்கள் ஸ்மார்ட்டாகவும் , அதிக வசதிகள் கொண்டதாகவும் மாறியுள்ளது. இந்த மாற்றம், நுகர்வோர் எந்த அளவுக்கு மாறியுள்ளனர் என்றும் தங்கள் பயண தேவைகளை அவர்கள் எந்த அளவுக்கு எளிதாக விளங்குகின்றனர் என்றும் தெளிவாக தெரிகிறது.
நிசான் டிசைன் குறித்து பேசிய அவர், இந்த திட்டத்தின் நோக்கமே அடுத்த தலைமுறையை கவரும் கிரியேட்டர்கள், மற்றும் மேம்படுத்தப்பட்ட டிசைன் மற்றும் கிரியேட்டிவ் மூலம் ஆட்டோமென்டடிவ் துறையில் தோன்றும் புதிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதேயாகும். சென்னை பப்ளிக் பள்ளி ஆடிட்டடோரியத்தில் நடந்த இந்த கூட்டத்தில், பள்ளியின் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஊழியர் கள் பங்கேற்றனர்.
எதிர்காலத்தில் வாகன துறையில் மட்டும் அல்ல, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, எலெக்ட்ரானிக்ஸ், நுகர்வோர் சாதனங்கள் போன்றவற்றில் டிசைனர்களே முக்கிய பங்கு வகிப்பார்கள். டிசைன் துறையின் வளர்ச்சியை தொடர்ந்து, நாங்கள் உலகளவில் டிசைன் துறையில் சிறந்த விளங்கும் மாணவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்க உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தனது வரைகலை பணி குறித்து விபரங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்ட அல்பைசா மேலும் தெரிவிக்கையில், டிசைனை துறையில் நல்ல வேலைவாய்ப்பு பெறுவதற்கு தன்னையே ஒரு உதாரணமாக கூறினார்
தொடர்ந்து பேசிய அவர், வாகன துறையின் டிசைன் வரலாறு, நிசான் நிறுவன டிசைன் தத்துவம் மற்றும் எதிர்கால வாகன துறையில் வர உள்ள ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் மற்றும் ஆட்டொமேஷன் போன்றவை குறித்து விளக்கம் அளித்தார்.