ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஆஃப் ரோடர் பைக் உற்பத்தி நிலை படங்கள் வெளிவந்துள்ளது. மிக சிறப்பான அட்வென்ச்சர் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் விளங்கும்.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் |
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது. இதில் முன் மற்றும் பின் பக்கங்களில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் பொருத்தப்பட்டிருக்கும்.
வட்ட வடிவ முகப்பு விளக்கினை முகப்பு விளக்குகள் காற்று மற்றும் மழையில் பாதிக்காத வகையில் ஷீல்டு பெற்றுள்ளது . மிக உயரமான மட்கார்டு , முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் சாக் அபர்சர்பர்கள் , ஆஃப் ரோட் பைக்கிற்க்கு ஏற்ப வெளியே தெரியும் சைன்கள் , என ஆஃப் ரோடர் பைக்குக்கான அம்சங்களை பெற்று விளங்குகின்றது.
பின்புறத்தில் முதன்முறையாக ராயல் என்ஃபீல்டு பைக்கில் மோனோ சாக் அப்சார்பரை பெற்றுள்ளது. ராயல் என்ஃபீல்டு பைக்கில் 29எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 410சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
அடுத்த இரண்டு மாதங்களில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் விற்பனைக்கு வரலாம் . ஹிமாலயன் பைக் விலை ரூ.2 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் |