இந்தியாவில் யூஎம் பைக்குகள் ரெனேகேட் கமாண்டோ மற்றும் ஸ்போர்ட் எஸ் பைக்குகளின் விலை ரூ.8000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் யூஎம் நிறுவனம் 24X7 சாலையோர உதவி மையத்தை திறந்துள்ளது.
அமெரிக்காவின் யூஎம் மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவின் லோகியா ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ரெனிகேட் கமாண்டோ மற்றும் ஸ்போர்ட் எஸ் மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. முதன்முறையாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கின் வாயிலாக இந்திய சந்தைக்கு யூஎம் வந்தது.
புதிய யூஎம் பைக் விலை விபரம்
ரெனிகேட் கமாண்டோ விலை – ரூ. 1.64 லட்சம் (ரூ.5000 உயர்வு)
ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் – ரூ.1.57 லட்சம் (ரூ.8000 உயர்வு)
உயர்ந்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மற்ற செலவீனங்களின் அடிப்படையிலே இந்த விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் இந்த விலை உயர்வினை சமாளிக்கும் வகையில் சுலபமான மாதந்திர கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம் என யூஎம்எல் நிர்வாக இயக்குநர் ராஜீவ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
க்ரூஸர் ரக யூஎம் பைக்குகள் உத்திராகன்ட் மாநிலத்தில் அமைந்துள்ள காசிப்பூர் லோகியா ஆட்டோ நிறுவனத்தின் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றது. என்ஜினை தவிர மற்ற பாகங்கள் அனைத்தும் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படுகின்றது.
யூஎம் ரோடு சைட் அசிஸ்ட்ன்ஸ்
ஜனவரி 1 , 2017 முதல் யூஎம்எல் நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு 24×7 சாலையோர உதவி மையத்தை அறிவித்துள்ளது. இந்த மையத்தின் தொடர்புகொள்ள இலவச தொலைபேசி எண் – 1800-102-1942
யூஎம் ஆர்எஸ்ஏ
- டீலர் இருப்பிடத்தில் இருந்து 50 கிமீ தொலைவு வரையிலான நேரடியான உதவிகள்
- பழுதினால் வாகனத்தை டீலருக்கு எடுத்த செல்ல வேண்டிய கட்டாம் என்றால் இலவச சேவை
- எரிபொருள் இல்லையென்றால் 1 லிட்டர் வரை எரிபொருள் வழங்கப்படும்.
- பேட்டரி பாரமரிப்பு
- டயர் பஞ்சர்
- சாவி தொலைந்தால் உதவி செய்யவதற்கு என பல விதமான வசதிகளை யூஎம் வழங்குகின்றது.