இந்தியாவில் யமாஹா மோட்டார்ஸ் நிறுவனத்தை மிக சிறப்பான விற்பனை இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் மிக தெளிவான திட்டத்துடன் இயங்கி வருகின்றது.
யமாஹா மோட்டார்ஸ் நிறுவனம் தற்பொழுது 400க்கு அதிகமான டீலர்களை கொண்டு இயங்கி வருகிறது. இதனை 1000த்திற்க்கு மேல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது 2013 ஆம்ஆண்டின் இறுதிக்குள் அதிகரிக்கப்படும். மேலும் 2018க்குள் 2000 டீலராகவும் அதிகரிக்கும்.
ஸ்கூட்டர் மார்க்கெட்டில் சில மாதங்களுக்கு முன் யமாஹா ரே ஸ்கூட்டரினை அறிமுகம் செய்தது.இது வரை 35,000 ஸ்கூட்டர்களுக்கு மேல் விற்றுள்ளது. இது மிக சிறப்பான வளர்ச்சினை குறிக்கின்றது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை விளம்பர தூதுவராக பயன்படுத்துவதை பலரும் அறிவோம்.
யமாஹா சென்னையில் ரூ 1500 கோடியில் புதிய ஆலையை நிர்மானித்து வருகின்றது. இந்த ஆலையை வருகிற 2018 ஆம்ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கும். இந்த ஆலையை மூலம் ஆண்டிற்க்கு 2.8 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும்.
இந்தியாவில் அடுத்தடுத்த பல புதிய மாடல்களை களமிறக்கும் திட்டத்திலும் உள்ளது. 3 சதவீதமாக உள்ள சந்தையின் மதிப்பை 10 சதவீதமாக 2016 க்குள் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் சந்தையை மிகப்பெரிய சந்தையாக யமாஹா கருதுகின்றது. எனவே இந்தியாவில் பல புதிய மாடல்களை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் களமிறக்கும்.
2012 ஆம் ஆண்டில் 4,87,290 வாகனங்களை விற்றுள்ளது. 2013 ஆம் ஆண்டில் 7,00,000 வாகனங்கள் விற்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பதிவு ஜூன் நக்டா( Jun Nakata-Yamaha Motor director, sales and marketing) அவர்கள் PTIக்கு அளித்த பேட்டியில் இருந்து தொகுக்கப்பட்டதாகும்.
யமாஹா மோட்டார்ஸ் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்