யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ரே, ரே இசட் மற்றும் ஆல்ஃபா போன்ற ஸ்கூட்டர்களை தொடர்ந்து டி’எலைட் ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டி’எலைட் ஸ்கூட்டர் பழமையான தோற்றத்தில் உள்ள ஸ்கூட்டராகும். இந்த ஸ்கூட்டர் ஐரோப்பா நாடுகளில் விற்பனையில் உள்ளது. பழமையான தோற்றத்தினை கொண்ட ஸ்கூட்டரான வெஸ்பாவுக்கு சவாலாக விளங்கும்.
ஐரோப்பாவில் 114சிசி விசைப்பொறி பயன்படுத்தியுள்ளனர். இதே விசைப்பொறியுடன் இந்தியா வருவதற்க்கான வாய்ப்பில்லை. ரே ஸ்கூட்டரில் உள்ள என்ஜின் பயன்படுத்தப்படலாம்.
அதிகப்படியான இடவசதி கொண்ட ஸ்கூட்டராக விளங்கும். டி’எலைட் ஸ்கூட்டர் விலை ரூ.55000 இருக்கலாம்.