இந்தியாவில் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படும் ஆர்1 பைக் ரூ.22.34 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதனை விட ரூ.2 லட்சம் வரை விலை குறைவான மாடலாக R1S இருக்கும்.
யமஹா ஆர்1 பைக்கின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் வந்துள்ள ஆர்1 எஸ் மாடல் ஆர்1 பைக்கில் இருந்த சில வசதிகளை இழந்துள்ளது. மெக்னீசியம் அலாய் வீலுக்கு பதிலாக 5 ஸ்போக்குகளை கொண்ட அலுமினிய அலாய் வீலை பெற்றுள்ளது. மேலும் டைட்டானியம் பயன்படுத்தப்பட்டிருந்த கனெக்டிங் ராட் ஸ்டீலுக்கு மாறியுள்ளது. ஆயில் பேன் , வலப்பக்க என்ஜின் கவர் போன்றவை அலுமினியத்தை பெற்றுள்ளது.
ஸ்டீல் கனெக்டிங் ராட் பெற்றுள்ளதால் வால்வ் ரீடிசைன் செய்யப்பட்டுள்ளதால் ரெட்லைன் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அலுமினிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ஆர்1 பைக்கை 4 கிலோ கூடுதலாக எடை உள்ளது. ஆர்1 எஸ் எடை 203.2 கிலோ ஆகும். மற்றபடி ஆற்றலில் எந்த மாற்றங்களும் இல்லை
200பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 112.4என்எம் ஆகும். இதில் 6வேக கியர்பாக்ஸ் உள்ளது.
அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ள யமஹா ஆர் 1 எஸ் இந்தியாவிலும் விற்பனைக்கு வரலாம்.
Yamaha R1S sports Bike unveiled