யமஹா YZF-R3 மாடலின் பெரும்பாலான பாகங்களை MT-03 பைக்கும் பெற்றிருக்கின்றது. புதிய யமஹா MT-03 பைக் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது.
ஆர்3 பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே டைமன்ட் வகை ஸ்டீல் அடிச்சட்டத்தினை பெற்றுள்ளது. மேலும் 40.5பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 321சிசி பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 29.6என்எம் ஆகும்.
ஆர்3 பைக்கில் உள்ள அதே பிரேக் ஆப்ஷன் மற்றும் சஸ்பென்ஷன்களை பெற்றுள்ளது. இதில் ஏபிஎஸ் ஆப்ஷன் மாடலும் இருக்க வாய்ப்புகள் உள்ளது. MT-03 பைக் இந்திய்யாவில் பாகங்களை தருவித்து ஒருங்கினைக்க வாய்ப்பு உள்ளது. ஆர்3 பைக்கில் உள்ள அலங்கரிக்கப்பட்ட அம்சங்கள் இதில் இருக்காது என்பதனால் ஆர்3 பைக்கை விட 4 கிலோ வரை எடை குறைவாக இருக்கும்.
கருப்பு , சில்வர் மற்றும் சிகப்பு என 3 வண்ணங்களில் வரவுள்ளது. யமஹா MT-03 பைக்கின் போட்டியாளர்கள் பெனெல்லி டிஎன்டி 300 , கவாஸாகி இசட் 250 மற்றும் கேடிஎம் டியூக் 390 போன்றவை ஆகும். எம்டி-03 பைக் அடுத்த வருடத்தில் இந்தியவில் விற்பனைக்கு வரும்.
Yamaha MT-03 revealed details