டாடா மோட்டார்சின் சர்வதேச விளம்பர தூதராக செயல்பட்டு வரும் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் டாடா மோட்டார்ஸ் விளம்பர தூதராக தொடருவார் என டாடா தெரிவித்துள்ளது.
கோப்பா அமெரிக்கா இறுதி கால்பந்தாட்ட போட்டியில் சிலி நாட்டுக்கு எதிரான் இறுதிப்போடியில் அர்ஜென்டினா தோல்வியை தழுவியதால் அதற்கு முழு பொறுபேற்று சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து விலகுவதாக மெஸ்ஸி அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து மிகுந்த வெறுப்புடன் மெஸ்ஸி பதிவு செய்த கருத்து மிகவும் கடிணமான கானமாக விளங்கும் தோல்வியால் அர்ஜென்டினா அணிக்கு விளையாடுவது என்பது இனி முடிந்து போன விஷயமாகவே உள்ளது என மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
டாடா டியாகோ பற்றி தெரிந்துகொள்ள
உலக அரங்கில் டாடா மோட்டார்ஸ் பிராண்டினை பிரபலப்படுத்தும் நோக்கில் விளம்பர தூதராக செயல்பட்டு வரும் மெஸ்ஸி ஓய்வு என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு , அவர் ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் விளம்பரங்களுக்கு தூதராக செயல்படுவார்.
வேறுஎந்த நிறுவனங்களுக்கும் விளம்பர தூதராக இல்லாமல் டாடா மோட்டார்ஸ்க்கு மட்டுமே மெஸ்ஸி உள்ளார் என்பது குறிப்பிடதக்க அம்சமாகும்.