GL எஸ்யூவி காருக்கு மாற்றாக மெர்சிடிஸ் பென்ஸ் GLS என்ற பெயரில் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பென்ஸ் எஸ் கிளாஸ் செடான் காரின் தாத்பரியத்தில் மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உட்புறம் மற்றும் வடிவம் போன்றவற்றில் சில மாற்றங்களை பெற்று விளங்குகின்றது. என்ஜினில் ஆற்றல் அதிரிக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 2016 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவிற்க்கு வந்தடையும்.
தோற்றம்
இரண்டு ஸ்லாட்களுக்கு மத்தியில் நட்சத்திர அமைப்புடைய பென்ஸ் லோகோ பதிக்கப்பட்டுள்ளது. முகப்பு விளக்குகள் , அலாய் வீல் , டெயில் விளக்குகள் கிராஃபிக்ஸ் , முன் மற்றும் பின்புற பம்பர்கள் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
உட்புறம்
7 இருக்கைகளை கொண்ட ஜிஎல்எஸ் எஸ்யூவி காரில் டேஸ்போர்டின் சென்ட்ரல் கன்சோலில் மிதக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தினை பெற்றுள்ளது. 3 ஸ்போக்குகளை கொண்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் நாப்பா லெதர் ஃபின்ஷ் செயப்பட்டுள்ளது..
என்ஜின்
328பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
449பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.7 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
557பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 5.5 லிட்டர் வி8 ட்வின் டர்போசார்ஜடு ஏஎம்ஜி பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
449பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.7 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
557பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 5.5 லிட்டர் வி8 ட்வின் டர்போசார்ஜடு ஏஎம்ஜி பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கம்ஃபோர்ட் , சிலிப்பரி , ஸ்போர்ட் , இன்டிஜூவல் , ஆஃப் ரோட் மற்றும் எக்ஸ்ட்ரா ஆஃப் ரோடு என மொத்தம் 6 மோட்களை கொண்ட டைனமிக் செலக்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது
அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் விற்பனைக்கு செல்கின்றது. இந்தியாவில் 2016 ஆம் ஆண்டின் மத்தியில் வரவுள்ளது.