வருகின்ற ஜனவரி 1, 2017 முதல் இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் அனைத்தும் 2 சதவீத விலை உயர்வினை பெற உள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 காரின் விலையும் உயர்கின்றது.
இந்திய சந்தையில் ரூ. 26 லட்சம் முதல் ரூ.2.60 கோடி வரையிலான விலையில் பலதரப்பட்ட மாடல்களை விற்பனை செய்து வரும் உலகின் முன்னனி சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ் நிறுவனத்தின் அனைத்து மாடல்களுமே விலை உயர்வினை பெறுகின்றது. விலை உயர்வு குறித்து கருத்து மெர்சிடிஸ் இந்தியா பிரிவு நிர்வாக இயக்குநர் தெரிவிக்கையில் உயர்ந்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களாலே விலை அதிகரிப்பு கட்டாயமாகின்றது என தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க ; பஜாஜ் டோமினார் 400 பைக் விலை விபரம்
மேலும் அவர் கூறுகையில் இந்த விலை உயர்வு சற்று பாதிப்பினை ஏற்படுத்தினாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான சொகுசு காராக முன்னனி இடத்தில் இருக்கவே பென்ஸ் விரும்புகின்றது என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டொயோட்டா ,டாடா ,ரெனோ , ஹூண்டாய் , நிசான் என சில நிறுவனங்கள் விலை உயர்வினை அறிவித்துள்ளது. மேலும் சில நிறுவனங்கள் விரைவில் விலை அதிகரிப்பு அறிவிப்பினை வெளியிட உள்ளது.