சர்வதேச அளவில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி GT இரண்டு வேரியண்டில் கிடைக்கின்றது. அவை ஸ்டான்டர்டு ஏஎம்ஜி ஜிடி மற்றும் ஏஎம்ஜி ஜிடி எஸ் ஆகும்.
510 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 4.0 லிட்டர் வி8 என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 650 என்எம் ஆகும். இதில் 7 வேக டிசிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு வெறும் 3.7 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 310கிமீ ஆகும்.
கம்ஃபோர்ட் , ஸ்போர்ட் , ஸ்போர்ட் + , ரேஸ் மற்றும் இன்டிஜூவல் என 5 விதமான மெர்சிடிஸ் டிரைவ் மோட் செலக்ட்ரை கொண்டுள்ளது.
முகப்பில் மிக நேர்த்தியான தோற்றத்தில் அமைந்துள்ள ஏஎம்ஜி GT S காரில் எல்இடி ஹை பெர்ஃபாமென்ஸ் முகப்பு விளக்கினை பெற்றுள்ளது. மேற்கூரை எல்இடி இண்டிகேட்டர் மற்றும் டெயில் விளக்குகளை பெற்று விளங்குகின்றது.
முன்பக்கத்தில் 19 இஞ்ச் அலாய் வீல் பின்புறத்தில் 20 இஞ்ச் அலாய் வீலில் கிடைக்கின்றது. அலாய் வீலில் 4 விதமான ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம்.
ஸ்போர்ட்டிவ் இருக்கைகளுடன் நேர்த்தியாக அமைந்துள்ள காரின் உட்புறத்தில் ஏஎம்ஜி இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , ஸ்டீயரிங் வீல் போன்றவற்றை பெற்றுள்ளது.
போர்ஷே 911 டர்போ எஸ் மற்றும் ஜாகுவார் எஃப் டைப் கார்களுக்கு கடும் சவாலாக ஏஎம்ஜி GT S விளங்கும்.
மெர்சிடிஸ் ஏஎம்ஜி GT S விலை
மெர்சிடிஸ் ஏஎம்ஜி GT S காரின் விலை ரூ.2.40 கோடி (எக்ஸ்ஷோரூம் டெல்லி)