நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் முதற்கட்டமாக டீலர்களை திறந்து வருகின்றது. முதலில் 8 மெட்ரோ நகரங்களில் மட்டும் லீனியா டி-ஜெட் விற்பனைக்கு வந்துள்ளது.
முன்பு இரண்டு விதமான மாறுபட்டவையில் மட்டும் இருந்த டி-ஜெட் தற்பொழுது கூடுதலாக ஒரு வேரியண்ட்டை இணைத்துள்ளது. சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படுத்தக்கூடிய காராக டி-ஜெட் வலம் வரும்.
1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 114 பிஎச்பி ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மழை வரும்பொழுது வைப்பர் தானாகவே இயங்கும், ஏபிஎஸ், காற்றுப்பைகள், இபிடி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் , 16 இஃச் ஆலாய் வீல் மற்றும் லெதர் இருக்கைகள் கொண்டு இருக்கின்றது.
இம்முறை கூடுதலாக எமோஷன் வேரியண்ட் இணைத்துள்ளது.
லீனியா டி-ஜெட் விலை விபரம்(தில்லி விலை)
லீனிடியா டி-ஜெட் ஆக்டிவ்: ரூ.7.60 இலட்சம்
லீனிடியா டி-ஜெட் டைனமிக்: ரூ.8.40 இலட்சம்
லீனிடியா டி-ஜெட் எமோஷன்: ரூ.8.80 இலட்சம்