பஜெரோ ஸ்போர்ட் காரில் X தோற்றத்திலான டைனமிக் சீல்டூ முகப்பு கிரிலை பெற்றுள்ளது. பகல் நேர எல்இடி விளக்குகள் என முந்தைய மாடலை விட முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் கம்பீரமாக விளங்குகின்றது.
பின்புறத்தில் முக்கோண வடிவ டெயில் விளக்குகள் பதிவென் பிளேட்டின் மேல் குரோம் பட்டையை பெற்றுள்ளது.
உட்புறத்தில் புதிய தொடுதிரை அமைப்பு , நவீன அம்சங்களை வரவிருக்கும் பஜெரோ ஸ்போர்ட் பெற்றிருக்கும்.
178பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் முறுக்குவிசை 430என்எம் ஆகும். 6 வேக மெனுவல் மற்றும் 5 வேக தானியங்கி கியர்பாக்சில் கிடைக்கும்.
பஜெரோ ஸ்போர்ட் போட்டியாளர்கள் ஃபோர்டு எண்டெவர் , செவர்லே ட்ரெயில்பிளேசர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகும். இந்தியாவிற்க்கு அடுத்த வருடத்தில் புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யுவி விற்பனைக்கு வரலாம்.