தற்பொழுது விற்பனையில் உள்ள மாடல்களிலே மிக சவாலான விலையில் கிடைக்கும். டீசல் ஆட்டோமேட்டிக் என்றால் அது டாடா ஸெஸ்ட் மட்டுமே இந்த காருக்கு போட்டியாக டிசையர் காரில் ஏஎம்டி கியர்பாக்ஸை பொருத்தி மாருதி சோதனை செய்து வருகின்றது.
ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் டிசையர் காரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதே என்ஜினில் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். டிசையர் டீசல் டாப் வேரியண்டான ZDi யில் மட்டுமே 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் இருக்கலாம் என தெரிகின்றது.
இந்தியாவின் மிக அதிக மைலேஜ் தரும் காராக வலம் வரும் டிசையர் காரில் ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இந்திய குடும்பங்களின் வரவாக அமையும் என்பதில் மாற்றமில்லை.
மாருதி செலிரியோ டீசல் மைலேஜ்
டாடா ஸெஸ்ட் ஏஎம்டி காருக்கு நேரடியான சவாலாக மாருதி ஸ்விஃப்ட் டிசையர் டீசல் ஏஎம்டி இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
சோதனை ஓட்ட கார்களை கண்டால்
Maruti Suzuki Swift Dzire Diesel AMT spied
source: gaadiwaadi