இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம் தன்னுடைய விற்பனை மற்றும் சேவை பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் 3500 ஐடிஐ (அரசு தொழிற்பயிற்சி நிலையம்) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க உள்ளது.
மிக வேகமாக வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி நிறுவனம் மொத்த இந்திய ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பில் 47 சதவிதத்தை கொண்டுள்ளது. வருடாந்திரம் 200 க்கு மேற்பட்ட விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை திறந்து வரும்நிலையில் 6000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது. இவற்றில் 3500 நபர்களுக்கு புதிதாக பணிக்கு சேர உள்ள ஐடிஐ படித்தவர்களுக்கு வழங்க உள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம் இணைந்து செயல்படுகின்ற 100 ஐடிஐகளில் இருந்து 2000 நபர்களும் மற்றவர்களை வேறு ஐடிஐ களில் இருந்த வேலைக்கு அமர்த்த உள்ளது. மாருதி சுசூகி நிறுவனத்தின் 3000 சர்வீஸ் சென்டர்கள் வாயிலாக சுமார் 65,000 டெக்னீஷியன்கள் பணியாற்றி வருகின்றனர். வருகின்ற 2020க்குள் இரு மடங்காக பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி கார்களின் தயாரிப்பு மிக நவீனத்துவமான நுட்பத்துக்கு மாறிவரும் நிலையில் ஐடிஐகளில் பழைய பயற்சி முறையே கடைபிடிக்கப்பட்ட வருவதனால் படிப்பவர்களுக்கான திறமை குறைவாக உள்ளது. எனவே இதனை கலையும் நோக்கில் 100 ஐடிஐ கல்வி மையங்களுடன் இணைந்து புதிய ஆட்டோமொபைல் மற்றும் பராமரிப்பு நுட்பங்களை 300 ஆசிரியர்களை கொண்டு ரூ.20 லட்சம் முதலீட்டில் மாருதி சுஸூகி பயிற்சி அளித்து வருகின்றது.
விரைவில் 3500 பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்பு உள்ள மாருதி சுசூகி இவர்களுக்கு 3 மாத பயற்சி மற்றும் உதவித் தொகையை வழங்குகின்றது. பயிற்சிக்கு பின்னர் மாதம் ரூ.10.000 சம்பளம் மற்றும் ஊக்கத் தொகைகள் செயல்திறன் அடிப்படையில் வழங்க உள்ளனர்.
3500 பணியிடங்களில் 2000 பணியிடங்கள் 100 ஐடிஐ கல்வி மையங்கள் வாயிலாக நேரடியாக மாருதி நியமிக்க உள்ள நிலையில் மற்ற 1500 பணியிடங்கள் மாருதி டீலர்கள் வாயிலாக நியமிக்க உள்ளது.
ஐடிஐ படித்தவர்கள் உங்கள் அருகாமையில் உள்ள மாருதி டீலர்களை அனுகுங்கள்….