மாருதி எர்டிகா |
சிறப்பான மைலேஜ் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள எஸ்எச்விஎஸ் ஹைபிரிட் நுட்பத்தில் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் செயல்பாடு , பிரேக் ஆற்றலை சேமிக்கும் ரீஜெனரேஷன் மற்றும் என்ஜின் பவர் அசிஸ்ட் போன்றவை உள்ளது.
மேலும் படிக்க ; மாருதி சுசூகி SHVS நுட்பம்
மாருதி சுசூகி கார்களில் பொருத்தப்பட்டுள்ள ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜின்பொருத்தப்பட்ட மாடல்களில் SHVS ஹைபிரிட் நுட்பத்தினை புகுத்த திட்டமிட்டுள்ளது. சியாஸ் வரிசையில் இணைய உள்ள மாடல்கள் எர்டிகா , ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் போன்ற மாடல்களாகும்.
மேலும் வரவிருக்கும் புதிய இக்னிஸ் காம்பேக்ட் எஸ்யூவி காரிலும் இந்த நுட்பத்தினை புகுத்தலாம் என தெரிகின்றது. மேலும் புதிய எஸ் க்ராஸ் மாடலிலும் இந்த நுட்பம் வர வாய்ப்புகள் உள்ளது.
மேலும் படிக்க ; மாருதி சியாஸ் SHVS டீசல் மைலேஜ்
மேம்படுத்தப்பட்ட மாருதி எர்டிகா வரும் அக்டோபர் மாதம் வரவுள்ளது . அதனை தொடர்ந்து டிசையர் ஏஎம்டி வரவுள்ளது. மேலும் காம்பேக்ட் எஸ்யூவி டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016யில் வரலாம்.
Maruti to increases SHVS technology on more cars