மஹிந்திரா M2all |
தனது அனைத்து சேவைகளையும்தொரே இடத்தில் ஆன்லைன் வழியாக இ காமர்ஸ் தளத்தினை அறிமுகம் செய்துள்ளது. M2all.com என்ற பெயரில் இதனை Mahindra Emarketplace Pvt Ltd தொடங்கியுள்ளது.
மஹிந்திரா ஆட்டோ பிரிவில் உள்ள கார் , பைக் , விவசாய வாகனங்கள் , டிரக் மற்றும் பஸ் எனவும் மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் போன்றவற்றின் சேவைகளுடன் , ரியல் எஸ்டேட் , ஐடி , பவர் சொலியூசன் மற்றும் ஏரோஸ்பேஸ் என அனைத்து சேவைகளுக்கான ஆன்லைன் அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.
மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நுட்பத்தின் அங்கமாக தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக சில தினங்களுக்கு முன் வந்த மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி காருக்கான் முன்பதிவு மற்றும் மஹிந்திரா டூ வீலர்களான கஸ்டோ மற்றும் செஞ்சூரோ போன்றவற்றுக்கும் முன்பதிவு தொடங்கியுள்ளது.
மஹிந்திரா குழுமத்தின் 31 பிராண்ட்களில் தற்பொழுது 5 பிராண்ட்களில் மட்டுமே சேவை தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வருடங்களில் அனைத்து சேவைகளும் தரப்பட உள்ளது.
இணைய தள முகவரி ; m2all.com
Mahindra m2all.com e-commerce site launched