மஹிந்திரா ரேவா e2o எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. e2o எலக்ட்ரிக் கார் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா e2o எலக்ட்ரிக் காரில் 19 கிலோவாட் 3 பேஸ் மோட்டார் பயன்படுத்தியுள்ளனர். ரேவா காரின் மோட்டார் 25.4 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 53என்எம் ஆகும். முழுமையான ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
48 வோல்ட் ஜீரோ பராமரிப்பு கொண்ட லித்தியம் ஐன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் ஏற 5 மணி நேரம் ஆகும். சார்ஜ்க்கு பிளக் சாதரன 220வோல்ட் 15SPA சாக்கட்டே பயன்படுத்தலாம். முழுமையான சார்ஜில் 100கீமி வரை பயணிக்கலாம். 1 மணி நேரம் சார்ஜ் ஏறினால் 20 கீமி வரை பயணிக்கலாம்.
மஹிந்திரா ரேவா e2o எலெக்ட்ரிக் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 81கீமி
பல்வறு விதமான சிறப்பம்சங்களை கொண்ட ரேவா e2o 2 கதவுகளை கொண்டது. 4 பெரியவர்கள் அமர்ந்து பயனிக்கலாம். ஈ2ஒ எடை 830 கிலோ ஆகும். 6 இன்ச் டச் ஸ்கிரின் நேவிகேஷன் அமைப்பு பயன்படுத்தியுள்ளனர். 6 வண்ணங்களில் ரேவா e2o எலெக்ட்ரிக் கார் கிடைக்கும்.
பூளுடூத் தொடர்பு, ஒரு தொடல் மூலம் மடியும் இருக்கை, ஐபாட் தொடர்பு, ரிவர்ஸ் கேமரா, கீலெஸ் என்ட்ரி ஸ்டார்ட்/ஸ்டாப், இன்னும் என்ன்ற்ற வசதிகள் உள்ளது.
மஹிந்திரா இ2ஒ எலெக்ட்ரிக் காரில் ஒரு கீலோமீட்டருக்கு 50-60 பைசா மட்டும் போதும். ஆனால் பெட்ரோல் காரில் ரூ 6க்கு மேல் ஆகும்.
டெல்லி அரசு e2o எலெக்ட்ரிக் காருக்கு சலுகைகள் வழங்கியுள்ளது. மற்ற மாநில அரசுகளும் சலுகைகள் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேவா இ2ஒ எலெக்ட்ரிக் கார் தயாரிப்பிற்க்கு ரூ 100 கோடி முதலீடு செய்துள்ளது. முதல்கட்டமாக 8 நகரங்களில் விற்பனைக்கு வரும்.
மஹிந்திரா e2o காரின் விலை ரூ 5.96 இலட்சம் ஆகும்.(எக்ஸ்ஷோரூம் புதுதில்லி விலை)
இன்னும் பல தகவல்கள் விரைவில்………………….