நாட்டின் மிக பெரிய யுட்டலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் 50 இலட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து புதிய சாதனை செய்துள்ளது.
மேலும் இந்த மைல்கல்லை சாதனை கொண்டாடும் வகையில் தனது தொழிலாளர்களை 3000 பேரை கொண்டு 4கிமீ தூரத்திற்க்கு மனித சங்கலியாக நிற்க வைத்து கொண்டாடி உள்ளது.
எஸ்யூவி மற்றும் எம்பிவி சந்தையில் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் மஹிந்திரா நிறுவனம் தனது மாடல்களான ஸ்கார்பியோ, பொலிரோ, எக்ஸ்யூவி500 கார்களின் மூலம் வலுவான அடிதளத்தினை கொண்டுள்ளது.
மேலும் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரினை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.
மேலும் சில: மஹிந்திரா புதிய கார்கள்