பிரசத்தி பெற்ற மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி காரில் பொலிரோ பவர் ப்ளஸ் வேரியண்ட் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. பொலிரோ பவர்+ கூடுதலான பவர் மற்றும் 4 மீட்டருக்குள் அமைந்திருக்கும் மாடலாக விளங்கலாம்.
தோற்றத்தில் பெரிதான மாற்றங்கள் இல்லாமல் புதிய எம்ஹாக் எஞ்சின் மற்றும் 4 மீட்டடருக்குள் அமைந்திருக்கும் மாடலாக எதிர்பார்க்கப்படும் பவர் ப்ளஸ் வேரியண்டில் 70 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் எம்ஹாக்70 எஞ்சினை பெற்றிருக்கலாம். இதன் டார்க் 195 என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ்இடம்பெற்றிருக்கலாம். இதுதவிர மைக்ரோ ஹைபிரிட் ஆப்ஷனும் பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 16.5 கிலோமீட்டர் ஆகும்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சந்தையில் மிக சிறப்பான எஸ்யூவி மாடலாக விளங்கி வரும் பொலிரோ காரில் 2.5 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கடுமையான சவால்கள் நிறைந்த பிரிவாக மாறி போன எஸ்யூவி சந்தையில் பிரசத்தி பெற்ற பொலிரோ 4 மீட்டருக்குள் அமைவதனால் மிகுந்த வரவேற்பினை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் அமோகமான சந்தை மதிப்பினை பெற்றுள்ள பொலிரோ எஸ்யூவி மஹிந்திரா நிறுவனத்தின் மிக முக்கியமான மாடலாகும்.