மஹிந்திரா பொலிரோ காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் சோதனை ஓட்டத்தில் உள்ள படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தோற்றத்தில் சிறிய அளவிலான மாற்றங்களுடன் உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகளை பெற்றிருக்கலாம்.
இந்திய சந்தையின் முடிசூடா எஸ்யூவி கார்களின் ராஜாவாக விளங்கும் பொலிரோ காரரின் விற்பனை புதிய ரக எஸ்யூவி கார்களின் வரவால் சற்று விற்பனை எண்ணிக்கை குறைந்த பொழுதும் என்றுமே இந்திய சந்தையின் சிறந்த எஸ்யூவி காராக விளங்கும்.
வெளியாகியுள்ள சோதனை ஓட்ட படத்தில் பின்புற தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மறைக்கப்பட்ட அம்சங்கள் மூலம் பின்புற பம்பர் , டெயில்கேட் லைட் பின்புற கைப்பிடிகள் போன்றவை புதுப்பிக்கப்பட்டிருக்கும். மேலும் முன்பக்கத்தில் மேம்படுத்தப்பட்ட முகப்பு பம்பரினை பெற்றிருக்கலாம். இன்டிரியரில் டேஸ்போர்டு மற்றும் இருக்கைகள் மேம்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் கூடுதலான வசதிகளை பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
வருகின்ற பண்டிகை காலத்திற்குமுன்னதாக புதிய மஹிந்திரா பொலிரோ கார் விற்பனைக்குஅறிமுகம் செய்யப்படலாம். விற்பனையில் உள்ள 2.5 லிட்டர் எம்ஹாக் m2DiCR டீசல் என்ஜினில் எந்த மாற்றங்களும் இருக்காது. இதன் ஆற்றல் 63 hp மற்றும் இழுவைதிறன் 180 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். மஹிந்திரா நிறுவனம் குறைந்த விலையில் பொலிரோ காரினை வடிவமைக்க உள்ளது.
Pic Source – CarWale