மஹிந்திரா ஆட்டோமொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மஹிந்திரா டிஜிசென்ஸ் நுட்பம் வாயிலாக மஹிந்திரா வாகனங்கள் , டிராக்டர் , டிரக் மற்றும் கட்டுமான கருவிகளுக்கான கிளவுட் முறையிலான தொடர்பினை ஏற்படுத்தியுள்ளது.
மஹிந்திரா டிஜிசென்ஸ் ( DigiSense, or digitally enabled sensing) நுட்பம் மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவின் அனைத்து வாகனங்களுக்கான சேவையை பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள நுட்பத்தில் முதற்கட்டமாக ஜீதோ , இம்பிரியோ பிக்அப் , அர்ஜூன் டிராக்டர் , மஹிந்திரா பிளேஷோ கனரக வாகனம் மற்றும் எர்த்மாஸ்டர் கட்டுமான கருவிகளுக்கு கிடைக்கின்றது.
வாகனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் கண்கானிக்கும் வகையில் ஃபீளீட் ஆப்ரேட்டர் , உரிமையாளர்கள் , ஓட்டுநர்கள் , சர்வீஸ் டீம் என அனைவரும் பயன்படுத்தும் வகையிலான இந்த செயலி வாயிலாக வாகனத்தின் தற்பொழுதைய நிலை, வாகன செயல்பாடு ,ரூட் பிளானிங் , வாகனத்தின் டெலிவரி திட்டங்கள் , வாகன இருப்பிடம் அறிதல் , ட்ரீப் அலர்ட் , எஞ்சின் செயல்திறன் என பல்வேறு தகவல்களை உடனுக்குடன் மிக தெளிவாக பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக டெக் மஹிந்திரா , பாஸ் மற்றும் வோடோஃபோன் என முன்று நிறுவனங்களின் கூட்டணியில் டிஜிசென்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் வர்த்தக பிரிவு வாகனங்களுக்கு டிஜிசென்ஸ் சேவையை வழங்கப்பட உள்ள நிலையில் படிப்படியாக பயணிகள் காருக்கும் விரிவுப்படுத்த உள்ளது. முதல் வருடத்திற்கு பிறகு கட்டன சேவையாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.