சிறிய ரக மைக்ரோ எஸ்யூவி மாடலாக விளங்கும் மஹிந்திரா கேயூவி 100 மாடலின் அனிவெர்ஸரி பதிப்பின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இரு வண்ண கலவையில் கேயூவி100 கிடைக்க உள்ளது.
மேம்பட்ட வசதிகளுடன் வரவுள்ள புதிய கேயூவி100 காரில் கருப்பு வண்ண மேற்கூரையை சில்வர் மற்றும் சிவப்பு வண்ண மாடல்களில் மட்டுமே இரு வண்ண கலவையிலான தோற்ற பொலிவுடன் மிக நேர்த்தியான மாடலாக விளங்க உள்ளது. புதிய 15 அங்குல அலாய் வீல் , கருப்பு வண்ணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இன்டிரியரை பெற்று விளங்கும்.
சமீபத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் பெட்ரோல் எஞ்சின் மாடலில் மைலேஜ் சார்ந்த மேம்பாடுகளை செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேயூவி100 எஞ்சின்
82 bhp @ 5500 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் G80 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 Nm 3500 முதல் 3600 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
77 bhp @ 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் D75 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் KUV100 காரில் பவர் மற்றும் இக்கோ மோட் உள்ளது.
முதல் வருடத்தை கொண்டாடும் நோக்கில் வரவுள்ள இந்த சிறப்பு பதிப்பு மாடலுக்கான முன்பதிவு டீலர்களிடம் தொடங்கப்பட்டுள்ளதால் அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு வரக்கூடும்.
பஜாஜ் டோமினார் பைக்கின் விலை குறைப்பு பின்னனி என்ன தெரிந்து கொள்ள மோட்டார் டாக்கீஸ் பார்க்க – automobiletamilan.com/motor-talkies/