125cc பிரிவில் புதிய மஹிந்திரா கஸ்டோ 125 ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக கஸ்ட்டோ 125 விற்பனைக்கு வரலாம்.
மஹிந்திரா கஸ்டோ
முன்பக்கத்தில் மிக வித்தியாசத்தை கொண்டுள்ள கஸ்டோவில் மூன்று பெரிய ஸ்லாட் ஏர் வென்ட் மற்றும் சிறிய ஸ்லாட்களை பெற்றுள்ளது. பக்கவாட்டில் க்ரோம் பூச்சூ கொண்ட கஸ்டோ பேட்ஜ் பதிக்கப்பட்டுள்ளது. பின்புறம் இன்னும் வெளியாகவில்லை. அழகான இரட்டை வண்ண கலவையில் 4 விதமான வண்ணங்களில் நேர்த்தியாக உள்ளது.
கஸ்டோ 110 ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்ட கஸ்டோ 125 ஸ்கூட்டரில் 110 ஸ்கூட்டரில் உள்ள அனைத்து வசதிகளை பெற்றுள்ளது. தோற்றத்தில் முன்பக்கத்தில் மட்டும் பெரிதான மாற்றங்களை கொண்டுள்ளது . பக்கவாட்டில் மாற்றங்கள் பெரிதாக இல்லை , புதிய வண்ணங்கள் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் போன்றவை அழகாக கொடுக்கப்பட்டுள்ளது.
110சிசி பிரிவில் கஸ்ட்டோ ஓரளவு சிறப்பான பங்களிப்பினை அளித்து வருகின்றது. கஸ்டோ 125 பைக்கில் 8.5 Bhp ஆற்றலை 7000 RPM யில் வழங்கும் 124.57cc என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 10 Nm அதிகபட்சமாக 5500 RPM யில் வழங்கும் . சிவிடி கியர்பாக்சினை பெற்றுள்ளது. கஸ்டோ 125 மைலேஜ் லிட்டருக்கு 60 கிமீ தரலாம்.
முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஏர் ஸ்பிரிங் சஸ்பென்ஷனுடன் பின்புறத்தில் காயில் ஸ்பீரிங் கொண்டுள்ளது. ஹாலஜென் முகப்பு விளக்குகள் , எல்இடி பைலட் விளக்கு , இருக்கை உயரம் அட்ஜெஸ்ட் வசதி , ஃபிளிப் கீ , ஃபைன் மீ மற்றும் குயிட் மீ விளக்குகள் போன்றவற்றை கஸ்ட்டோ 110 ஸ்கூட்டரில் இருந்து பெற்றுள்ளது.
மஹிந்திரா கஸ்டோ 125 ஸ்கூட்டர் படங்கள்