மின்சார கார்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் மஹிந்திரா இ-வெரிட்டோ மின்சார கார் ரூ.9.50 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் இ-வெரிட்டோ எலக்ட்ரிக் கார் கிடைக்கும்.
வெரிட்டோ செடான் காரின் தோற்றத்திலே அமைந்துள்ள இவெரிட்டோ தோற்ற அமைப்பிலும் உட்புறத்திலும் பெரிதாக எந்த மாற்றிதினையும் பெறவில்லை. 72 வோல்ட் லித்தியம் ஐன் பேட்டரியின் மூலம் மின்சாரம் சேமித்து வைத்து மூன்று பேஸ் இன்டக்ஷன் ஏசி மோட்டார் மூலம் ஒற்றை வேக டிரான்ஸ்மிஷனுடன் இயங்குகின்றது. கிளட்ச் இல்லாத மாடலாகும்.
41 hp திறன் மற்றும் 91 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் வகையில் இதன் செயல்திறன் அமைந்துள்ளது.
ஒருமுறை முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு 8.45 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.. வேகமான சார்ஜிங் முறையின் வாயிலாக 80 சதவீத சார்ஜ் வெறும் 1.45 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிவிடும். ஆனால் இது மஹிந்தாவின் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்தில் மட்டுமே சாத்தியம். முழுமையான சார்ஜ்யில் 110 கிமீ வரை பயணிக்க இயலும். மஹிந்திரா இ-வெரிட்டோ மின்சார காரின் உச்ச வேகம் மணிக்கு 86 கிமீ ஆகும்.
1 கிமீ பயணிக்க வெறும் ரூ. 1.15 பைசா மட்டுமே தேவைப்படும். மாசு உமிழ்வு என்ற பிரச்சனை இல்லாமல் மின்சாரத்தில் இயங்கும் காராக இவெரிட்டோ செயல்படும்.
D2 , D4 மற்றும் D6 என மொத்தம் மூன்று விதமான வேரியண்டில் எலக்ட்ரிக் வெரிட்டோ கார் கிடைக்கும்.
D2 பேஸ் வேரியண்டில் ரீஜெனரேட்டிவ் சிஸ்டம் , வாகன பழுதினை கண்டுபிடிக்கும் அமைப்பு , ஈக்கோ மற்றும் பூஸ்ட் மோட் , REVIVE என்பது குறைவான பேட்டரி உள்ள சமயத்தில் 8 கிமீ வரை பயணிக்க உதவும் அமைப்பு என பலவற்றை பெற்றுள்ளது.
D4 வேரியண்டில் D2 வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக அலாய் வீல் , இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ரிமோட் லாக் , கீலெஸ் என்ட்ரில் எலக்ட்ரிக் ஓஆர்விஎம் மற்றும் ஃபாலோ மீ முகப்பு விளக்கினை பெற்றுள்ளது.
D6 டாப் வேரியண்டில் D4 வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக ஃபாஸ்ட் சார்ஜிங் அமைப்பு உள்ளது.
மஹிந்திரா இ-வெரிட்டோ விலை பட்டியல்
e-Verito D2- ரூ. 9.50 lakhs
e-Verito D4 – ரூ. 9.75 lakhs
e-Verito D6 – ரூ. 10 lakhs
(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )
இந்திய அரசின் FAME (Faster Adoption and Manufacturing of Electric Vehicles in India) திட்டத்தின் கீழ் சலுகை பெற முடியும். மஹிந்திரா ரேவா e20 காரினை தொடர்ந்து 2வது மாடலாக இவெரிட்டோ வந்துள்ளது.