டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக எந்த கான்சப்ட் கார்களை ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கவில்லை. டாடா சஃபாரி ஸ்ட்ராம் மற்றும் ஆர்யா காரை பார்வைக்கு வைத்துள்ளது.
டாடா சஃபாரி ஸ்ட்ராம் காரை மாற்றியமைக்கப்பட்ட மவுன்டைன் ரேஸ்க்யூ காராக பார்வைக்கு வைத்துள்ளது. இந்த காரானது மலைப்பாதைகளில் பனி மிகுந்த சாலைகளில் இயல்பாக பயணிக்க முடியும்.
புதிதாக முன்புற பம்பர் மற்றும் வின்ச், பெரிய பிளாஷ் லைட், பின்புறத்தில் ட்ரைலர் இனைக்க ஹூக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஐரோப்பா சந்தைகளை குறிவைத்து களமிறக்கலாம்.