நாடு முழுவதும் உள்ள அனைத்து வர்த்தக வாகனங்களின் ஆயுளை 15 ஆண்டுகளாக நிர்னைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த பாரீஸ் பருவநிலை மாநாட்டினை தொடர்ந்து இந்த அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களுக்கு தேசிய உரிமம் வழங்கப்படுவதில்லை என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ள நிலையில் 15 ஆண்டுகளுக்கு மேலான அனைத்து வர்த்தக ரீதியான பயன்பாட்டு வாகனங்களை தடை விதிக்க மத்திய அரசு ஆய்வு செய்து வருகின்றது.
15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களில் அதிக மாசு , பராமரிப்பு இல்லா காரணத்தால் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் 27 லட்சம் வர்த்தக வாகனங்கள் இருக்கலாம்.
கடந்த ஆண்டு உல சுகாதார நிறுவனம் வெளியிட்ட உலகின் மிக மோசமாக மாசடைந்த 20 நகரங்களில் இந்தியாவின் 13 நகரங்கள் இடம்பிடித்திருந்தது. எனவே நாளுக்குநாள் சுற்றுசூழல் மாசு அதிகரித்து வருவதனால் இந்த நடவடிக்கைய எடுப்பது மிக அவசியமாக இருக்கும்.
இதுகுறித்து பலதரப்பட்ட கருத்துகளை கேட்ட பின்னர் இறுதிமுடிவை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி எடுப்பார்.