பக்ல்ஸ் இல்லாத புரட்சிகரமான வாஸா 1.0 RS ஹெல்மெட்டினை ஆஸ்திரேலியா ஹெல்மெட் தயாரிக்கும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. லாக்கிங் மெக்கானிஸம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹெல்மெட்டில் தாடைக்கான பட்டை இருக்காது.
ஹின்ஜஸ் உதவியுடன் பின்புறமாக ஹெல்மெட்டினை திறந்து தலையில் அணிந்து கொண்ட பின்னர் மூடி கொள்ளலாம். பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் தாடை பட்டை அணிவதில்லை . இதால் விபத்தின் பொழுது தலை கவசம் தனியாக கழன்று விடும் நிலையில் தான் தற்பொழுதைய நிலை உள்ளது.
இந்த நிலையை மாற்றும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள புரட்சிகரமான இந்த ஹெல்மெட்டினை வாஸ்டெக் சிஸ்டம் உருவாக்கியுள்ளது. இந்த வாஸ் 1.0 ஆர்எஸ் ( VOZZ 1.0 RS) ஹெல்மெட்கள் மிக வேகமாக பயணித்தாலும் தலையை விட்டு பெயராது மேலும் விபத்தின்பொழுதும் தலையிலே இருக்கும்.வாஸ் 1,0 RS தலைகவசத்தினை சிறப்பான முறையில் வடிவமைத்துள்ளதால் குளிர் மற்றும் வெப்ப காலங்களில் சிறப்பான உணர்வினை இந்த ஹெல்மெட் அளிக்கும்.
வாஸ் ஹெல்மெட் நிறுவனம் உலக முழுதும் உள்ள IS 9000 தரச்சான்றிதழ் பெற்றுள்ள அனைத்து நிறுவனங்களுடனும் வாஸ் 1.0 ஆர்எஸ் ஹெல்மெட் தயாரிக்க கூட்டணி சேர்ந்துள்ளது. DOT மற்றும் ECE அங்கிகாரத்தை பெற்றுள்ள இந்த ஹெல்மெட்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நாளை முதல் டிசம்பர் 23 , 2015 முதல் விற்பனைக்கு வருகின்றது.
வாஸ் ஹெல்மெட்களுக்கு தயாரித்த தேதியில் இருந்து 5 வருடங்களும் , வாங்கி தேதியிலிருந்து 3 வருடங்களும் வாரண்டி வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கும் வாஸ் ஹெல்மெட் வரவாய்ப்புகள் உள்ளது.
VOZZ 1.0 RS Helmet வீடியோ இணைப்பு
[youtube https://www.youtube.com/watch?v=VIBnDQBDi3w]
VOZZ 1.0 helmet image gallery