2016 ஆம் ஆண்டில் புதிதாக விற்பனைக்கு வரவுள்ள புதிய ஸ்கூட்டர்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். இவற்றில் சில ஸ்கூட்டர்கள் மிகுந்த சக்திவாய்ந்தவைகளும் வரவுள்ளது.
பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஏற்ற புதிய ஸ்கூட்டர்களும் இந்த ஆண்டில் வரிசை கட்ட உள்ளது.
-
ஹீரோ ZIR
2014 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு வந்த ஹீரோ ZIR ஸ்கூட்டரில் 14 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 157சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். ZIR ஸ்கூட்டரில் எல்இடி ரன்னிங் விளக்கு , யூஎஸ்பி கனெக்டிங் என பல நவீன வசதிகளை பெற்றிருக்கும். வரும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு வரலாம்.
வருகை : ஏப்ரல் 2016
விலை : ரூ.85,000 தொடங்கலாம்
போட்டியாளர்கள் : வெஸ்பா SXL 150 , PCX 150 , NMAX
2. மஹிந்திரா G108
மஹிந்திரா G108 என்ற குறியிட்டு பெயரில் தயாரிக்கப்பட்டு வரும் கஸ்ட்டோ 125சிசி மாடல் பல நவீன அம்சங்களை பெற்றிருக்கும். இதில் 10 பிஎஸ் ஆற்றலை வழங்கும் 125சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதில் இருக்கை உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி , யூஎஸ்பி போர்ட் என பல வசதிகளை கொண்டிருக்கும்.
வருகை : பிப்ரவரி 2016
விலை : ரூ.55,000 தொடங்கலாம்
போட்டியாளர்கள் : ஆக்டிவா 125 , அசெஸ்
3. ஹோண்டா PCX 150
மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய மாடலாக விளங்கும் ஹோண்டா PCX 150 ஸ்கூட்டரில் 13.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 153சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.
வருகை : ஏப்ரல் 2016
விலை : ரூ.85,000 தொடங்கலாம்
போட்டியாளர்கள் : வெஸ்பா SXL 150 , ZIR , NMAX
4. யமஹா NMax
சக்திவாய்ந்த யமஹா NMax ஸ்கூட்டரில் 15பிஎஸ் ஆற்றலை வழங்கும் 155சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் . சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களுடன் விளங்கும் யமஹா NMax ஸ்கூட்டரில் ஏபிஎஸ் ஆப்ஷனலாக இருக்கலாம்.
வருகை : ஆகஸ்ட் 2016
விலை : ரூ.95,000 தொடங்கலாம்
போட்டியாளர்கள் : வெஸ்பா SXL 150 , ZIR ,PCX150
5. ஹீரோ டேர்
ஹீரோ நிறுவனத்தின் புதிய டேர் ஸ்கூட்டரில் 125சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். ஆக்டிவா 125 மாடலுக்கு போட்டியாக இந்த ஸ்கூட்டர் விளங்கும்.
வருகை : பிப்ரவரி 2016
விலை : ரூ.60,000 தொடங்கலாம்
போட்டியாளர்கள் : ஆக்டிவா 125 , சுசூகி அசெஸ்
6. ஹீரோ லீப்
ஹீரோ நிறுவனத்தின் ஹைபிரிட் ஸ்கூட்டராக வரவுள்ள லீப் மாடலில் 125சிசி பெட்ரோல் என்ஜின் மற்றும் 3 கிலோவாட்ஸ் மோட்டாரும் பொருத்தப்பட்டிருக்கும். வரும் டெல்லி மோட்டார் ஷோவில் பார்வைக்கு வரவுள்ளது.
வருகை : பிப்ரவரி 2016
விலை : ரூ.75,000 தொடங்கலாம்
7. பியாஜியோ லிபர்ட்டி
வெஸ்பா பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் பியாஜியோ ஸ்கூட்டரில் 125சிசி என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. வரும் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வரவுள்ளது.
வருகை : பிப்ரவரி 2016
விலை : ரூ.60,000 தொடங்கலாம்
போட்டியாளர்கள் : ஆக்டிவா 125 , சுசூகி அசெஸ்
உங்களுக்கு எந்த ஸ்கூட்டர் பிடிச்சிருக்கு மறக்காம கமென்ட் பன்னுங்க bro
புதிய ஸ்கூட்டர்கள் – 2016 படங்கள்