புதிய மோட்டார் வாகன (மசோத) 2016-ல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள புதிய அம்சங்களுக்கு திருத்தங்களும் செய்யப்பட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது.
மோட்டார் வாகன (மசோதா) 2016
- கடந்த 2016 ம் ஆண்டில் லோக்சபாவில் திருத்தங்கள் செய்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
- குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூபாய் 10,000 அபராதம்
- ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூபாய் 5,000 அபராதம்
- மூன்று மாதங்கள் வரை ஒட்டுநர் உரிமம் முடக்கப்படும்.
1989 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் சிறப்பான வகையில் பல திருத்தங்கள் செய்யப்பட்ட பாராளுமன்றம் நிலைக்குழுவில் 16 திருத்தங்களுக்கு அனுமதியும் , மூன்று திருத்தங்களுக்கு அனுமதி அளிக்க வில்லை. வாகன சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் வாரம், பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அபராதம் எவ்வளவு ?
- மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால், நடைமுறையில் உள்ள சட்டப்படி, 2,000 ரூபாய் மட்டுமே அதிகபட்சமாக அபராதம் விதிக்க முடியும். புதிய திருத்தங்களின்படி வரவுள்ள சட்டத்தில் , அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.
- செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது , முந்தைய அபராம் ரூபாய் 1,000-த்தில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
- போக்குவரத்து சிக்னலை மதிக்காதது, காரில் இருக்கை பெல்ட் அணியாமல் ஓட்டுவது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்வது ஆகியவற்றுக்கு 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். அதிகபட்சமாக 3 மாதம் டிரைவிங் லைசென்ஸ் தடை விதிக்கப்படும். இந்தச் சட்டத்தை மீறும் எம்பிக்கள், எம்எல்ஏ.க்கள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் இந்த குற்றங்களை செய்து சிக்கினால் இரு மடங்கு தொகை அபராதம் வசூலிக்கப்படும்.
- 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்பட்டால் அது குற்றமாக கருதப்படும். அந்த சிறுவர்களின் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
விபத்து இழப்பீடு தொகை எவ்வளவு ?
- விபத்தில் உயிர் இழப்பு ஏற்படுகின்ற குடும்பத்திற்கு, விபத்து நடந்த நான்கு மாதங்களுக்குள் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு மேலும் படுகாயம் அடைபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும் வகையில் காப்பீடு துறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் உள்ள சட்டத்தில் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான் இழப்பீடு தொகை கிடைக்கிறது.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தவர் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வரும் தொபையை விட எட்டு மடங்கு கூடுதலாக இனி, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும்.
- உபேர் , ஓலா போன்ற கால் டாக்சி தொடர்பான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளதால் , லைசென்ஸ் விதிமுறைகளை நிறுவனங்கள் மீறினால், 25,000 ரூபாயில் முதல் அதிகபட்சமாக 1,00,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
இனி எல்லாம் ஆதார்
- முறை கேடுகளை தடுக்கும் வகையில் வாகன பதிவு , லைசென்ஸ் உள்பட அனைத்துக்கும் ஆதார் எண் இனி கட்டாயம்.
- ஆதார் எண் பெறுவதனை வாகன விற்பனையாளர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
- இனி இணையதளம் மூலமே வாகன லைசென்ஸ் வழங்கப்படும்.
தயாரிப்பாளர்களுக்கு அபராதம்
வாகன தயாரிப்பாளரின் பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் தரத்தை பூர்த்தி செய்யவில்லை எனில் ரூபாய் 500 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.
புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தங்கள் மசோதா 2016 உங்கள் கருத்து என்ன ?….