2015 பிஎம்டபிள்யூ X6 எஸ்யுவி வரும் ஜூலை 23ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளனர். வரவிருக்கும் புதிய பிஎம்டபிள்யூ X6 எஸ்யுவி இரண்டாம் தலைமுறை மாடலாகும்.
பிஎம்டபிள்யூ X6 எஸ்யுவி |
முந்தைய தலைமுறை பிஎம்டபிள்யூ X6 காரை விட 40கிலோ வரை எடை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் காரின் முன் மற்றும் பின் பக்கத்திற்க்கு எடை அளவு 50;50 என சமமாக இருக்கும்.
இந்தியாவில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படும் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 காரில் 313எச்பி ஆற்றலை வழங்கும் 6 சிலிண்டர் கொண்ட 3.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
xDrive40d வேரியண்ட் இந்தியாவிற்க்கு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகின்றது. 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 5.8 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 240கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும் பிஎம்டபிள்யூ X6 பெர்ஃபாமென்ஸ் மாடலான பிஎம்டபிள்யூ எக்ஸ்6 M எஸ்யுவி இந்த ஆண்டின் இறுதியில் வரலாம்.
2015 BMW X6 to launch in India on July 23 2015