புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்பன் ஃபைபர் பிளாஸ்டிக் , அலுமினியம் மற்றும் உறுதியான ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. லாங் வீல் பேஸ் மற்றும் ஸார்ட் வீல் பேஸ் என இரண்டு வேரியண்டிலும் முந்தைய வீல்பேஸ் அளவே கொண்டுள்ளது.
வடிவம்
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் முகப்பில் கிட்னி கிரில் அமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற பம்பர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் பனி விளக்குகள் . லேசர் ஓளிகற்றை முகப்பு விளக்கினை ஆப்ஷனலாக பெற்றுக்கொள்ளமுடியும். கிளாஸ் ஹவுஸ் சுற்றி குரோம் பூச்சு ஸ்டீரிப் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டிலும் பின்புறத்தில் குரோம் ஸ்டீரிப் பளிச்சென தெரிகின்றது.
உட்புறம்
உட்புறத்தில் புதிய டிசைன் டேஸ்போர்டு மேம்படுத்தப்பட்ட இன்ஸ்டூருமென்ட்ல் கிராஃபிக்ஸ் , புதிய வண்ண விளக்குகள் , பல நவீன அம்சங்கள் , புதிய தொடுதிரை அமைப்பு என பலவற்றை பெற்றுள்ளது.
iடிரைவ் கட்டுப்பாடில் தொடுதிரை மற்றும் கெஸ்ட்ர் மூலம் இயங்கும் வசதிகளை கொண்டிருக்கும்.
என்ஜின்
பிஎம்டபிள்யூ 730d மாடலில் 261பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 6 சிலிண்டர் கொண்ட 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
பிஎம்டபிள்யூ 740Li மாடலில் 321பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 6 சிலிண்டர் கொண்ட 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
பிஎம்டபிள்யூ 740e ஹைபிரிட் மாடலில் 321பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 6 சிலிண்டர் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.
அனைத்து என்ஜின் ஆப்ஷனிலும் 4 விதமான டிரைவ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. அவை கம்ஃபோர்ட் , ஈக்கோ -புரோ , ஸ்போர்ட் மற்றும் புதிய அடாப்டிவ் மோட் ஆகும்.
இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் இந்திய சந்தையில் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம்.
All-New 2016 BMW 7-Series revealed