வருகின்ற அக்டோபர் 2016யில் பிஎம்டபுள்யூ மோட்டார்டு மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்கு முழுமையாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கிய மெட்ரோ நகரங்களில் டீலர்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
டிவிஎஸ்-பிஎம்டபுள்யூ கூட்டணியில் உருவாகியுள்ள தொடக்கநிலை பிஎம்டபுள்யூ ஜி310 ஆர் நேக்டூ பைக் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆலையில் தயாரிக்கப்பட்ட பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
மற்ற சூப்பர் பைக் மாடல்கள் வெளிநாட்டில் அமைந்துள்ள பிஎம்டபிள்யூ மோட்டார்டு ஆலைகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. குறிப்பாக தாய்லாந்து நாட்டில் அமைந்துள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் இருந்து F800R மற்றும் S1000R போன்ற சூப்பர் பைக்குகளும் , S1000RR , S1000XR , பாரம்பரிய ஜிஎஸ் மாடல்களான F700GS, F800GS, R1200GS மற்றும் R1200GS அட்வென்ச்சர் மேலும் R NineT ஸ்க்ராம்பலர் மற்றும் K1600GTL போன்ற மாடல்களும் விற்பனைக்கு வரவுள்ளது.
தற்பொழுது மும்பை , பெங்களூரு இரு நகரங்களில் மட்டுமே சில குறிப்பிட்ட மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்திய சூப்பர் பைக் ரசிகர்களுக்கு மிக சிறப்பான விருந்தாக பிஎம்டபிள்யூ மோட்டார்டு அமையுள்ளது.
மேக் இன் இந்தியா மாடலான பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் விலை ரூ. 1.80 லட்சத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதனால் நிச்சியமாக அதிகப்படியான வாடிக்கையாளர்களை பிஎம்டபுள்யூ மோட்டார்டு பெறும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
source : autocarindia