பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மிக விரைவில் பல்சர் `RS200 பைக்கினை விற்பனைக்கு கொண்டு வரவுள்ள நிலையில் முதல் டீசரை பஜாஜ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
முதலில் பல்சர் 200SS என்று பெயரிடப்பட்டிருந்த பைக்கினை SS என்பதனை நீக்கிவிட்டு ஆர்எஸ்200 என பெயரிட்டு டீசரினை வெளியிட்டுள்ளது. RS என்றால் Racing Sports அல்லது Racing Sport என்பது இதன் விளக்கமாக இருக்கும் என கருதப்படுகின்றது.
200என்எஸ் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 200சிசி என்ஜினே இதிலும் பயன்படுத்த உள்ளதாக தெரிகின்றது. 23.2பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 199.சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.
ஆர்எஸ் 200 பைக் முழுமையாக அலங்கரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிளாக (fully-faired motorcycle) டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிகின்றது. மேலும் ஆர்எஸ்200க்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.
Updated –
பல்சர் ஆர்எஸ் 200 பைக்கிற்க்கான முன்பதிவு இணையத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வரும் மார்ச் 26ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இணையத்தில் முன்பதிவு ; Pulsar RS200 Booking