பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று வருகின்றது. மாதம் 1700 பல்சர் RS200 பைக் உற்பத்தி செய்யப்படுவதை 4000 பைக்காக உயர்த்த பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக விற்பனை செய்யப்படும் 56 நகரங்களில் அதிக வரவேற்பு உள்ளதால் நாடு முழுவதும் விற்பனைக்கு வரும்பொழுது இன்னும் அதிகப்படியான ஆர்எஸ்200 பைக் தேவை இருக்கும் என்பதால் உற்பத்தியை அதிகரிக்கின்றது.
சக்கன் ஆலையில் தயாரிக்கப்படும் பல்சர் RS200 பைக்கில் ஏபிஎஸ் மாடலும் கிடைக்கின்றது. பல்சர் ஆர்எஸ்200 பைக் போட்டியாளர்கள் யமஹா R15 , ஹோண்டா CBR250 மற்றும் CBR 150 ஆகும்.
மேலும் படிக்க
பல்சர் RS200 முன்பதிவு அமோகம்
பல்சர் ஆர்எஸ்200 விலை மற்றும் விபரம்
Bajaj Auto increases pulsar RS200 production