ஹோண்டா நிறுவனத்தின் அபரிதான வளர்ச்சியால் மூன்றாம் இடத்திற்க்கு பஜாஜ் சில மாதங்களுக்கு முன் தள்ளப்பட்டது. இதனால் அடுத்த 1ஆண்டிற்க்குள் 8 புதிய மாடல்களை அறிமுகம் செய்து இதனை ஈடுகட்ட திட்டமிட்டுள்ளது.
6 புதிய டிஸ்கவர் மாடல்களை களமிறக்க பஜாஜ் திட்டமிட்டுள்ளது. இவற்றில் 4 மாடல்கள் ரூ.40,000 முதல் ரூ.50,000 விலைக்குள் இருக்கும். மேலும் இரு மாடல்கள் இவற்றை விட சற்று கூடுதலான விலையில் இருக்கும்.
பல்சர் 150 மற்றும் பல்சர் 375 மாடல் என இரண்டு பல்சர் மாடல்கள் வெளிவரும். இவை அனைத்தும் இன்னும் ஒரு ஆண்டுக்குள் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.