வரும் செப்டம்பர் 25ந் தேதி பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் விற்பனைக்கு வருகின்றது. பஜாஜ் ஆர்இ60 தனிநபர் பயன்பாட்டிற்க்கு மட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
பஜாஜ் ஆர்இ60 |
குவாட்ரிசைக்கிள் என்றால் காருக்கும் ஆட்டோ ரிக்ஷாவுக்கும் இடையில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய ரக மாடலாகும். ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் பல தடைகளுக்கு பிறகு மத்திய அரசின் அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.
17பிஎச்பி ஆற்றலை அளிக்கும் 216சிசி லக்யூடு கூல்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படட்டிருக்கும். இதில் மூன்று ஸ்பார்க் பிளக்குகளை கொண்டிருக்கும். ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி வகைகளிலும் கிடைக்கும்.
பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் மைலேஜ் லிட்டருக்கு 37கிமீ ஆகும்.
மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஷாவுக்கு மாற்றாக வரவுள்ள RE60 குவாட்ரிசைக்கிள் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Bajaj RE60 to launch on September 25, 2015