இந்திய யுட்டிலிட்டி சந்தையில் முன்னனி வகிக்கும் மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி கார் ரூ.7.58 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்தது. நூவோஸ்போர்ட் எஸ்யூவி காரின் முக்கிய விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.
காம்பேக்ட் ரகத்தில் முதல் மாடலாக வந்த குவாண்ட்டோ காரின் புதிய தலைமுறை மேம்படுத்தப்பட்ட முற்றிலும் மாறுபட்ட மாடலாக புதிதாக நூவோஸ்போர்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- குவாண்ட்டோ காரின் புதிய மேம்படுத்தப்பட்ட மாடலே நூவோஸ்போர்ட் எஸ்யூவி காராகும்.
- புதிய ஸ்கார்ப்பியோ மற்றும் டியூவி300 காரில் பயன்படுத்தபட்ட ஹைட்ஃபாரம் லேடர் ஃபிரேம் அடிச்சட்டத்தினை கொண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
- முற்றிலும் மாறுபட்ட முகப்பு தோற்றம் கூடுதல் கம்பீரத்தினை பெற்றுள்ள நூவோஸ்போர்ட் காரில் அகலமான பாரம்பரிய கிரிலுடன் சிறப்பான முகப்பு விளக்குடன் தினி பிரிவான பகல் நேர ஒளிரும் எல்இடி விளக்கினை பெற்றுள்ளது.
- பக்கவாட்டு தோற்றம் மற்றும் பின்புறத்தில் முந்தைய மாடலையே தழுவியே உள்ளது.
- டியூவி300 காரில் 1.5 லிட்டர் எம் ஹாக்80 என்ஜினே , எம் ஹாக் 100 என புதிய பிராண்டில் 100 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 240 Nm ஆகும்.
- 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் தவிர ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது. இதன் மெனுவல் கியர்பாக்ஸ் மாடலில் பவர் மற்றும் ஈக்கோ என இரு மோட் ஆப்ஷனை கொண்டுள்ளது.
- முந்தைய மாடலின் உட்புறத்தினை தழுவியே உள்ள புதிய நூவோஸ்போர்ட் காரில் 5+2 என 7 இருக்கையில் முதல் இரு வரிசை மிக தாரளமான இடவசதி மற்றும் ஹெட்ரூம் பெற்றுள்ளது.
- டியூவி300 காரில் உள்ள பெரும்பாலான வசதிகளை நூவோஸ்போர்ட் பெற்றுள்ளது.
- டியூவி300 காருக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
- டியூவி300 , விட்டாரா பிரெஸ்ஸா , ஈக்கோஸ்போர்ட் போன்ற மாடல்களுடன் சந்தயை பகிர்ந்துகொண்டுள்ளது.
மேலும் படிங்க ; மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி கார் விலை