ட்யூப் டயர்
ட்யூப் டயர் பல காலமாக பயன்பாட்டில் உள்ள டயர் ஆகும். ட்யூப் டயர் பல்வேறு விதமான குறைகளை கொண்டதாகும். பஞ்சர் ஏற்பட்டால் உடனடியாக காற்று வெளியேறும். ட்யூப் டயரில் உள்ள பல குறைகளை தவிர்த்து மேம்படுத்தப்பட்ட டயரே ட்யூப்லஸ் டயர் ஆகும்.
ட்யூப்லஸ் டயர்
1. ட்யூப்லஸ் டயரில் பஞ்சர் ஆனால் காற்று மெல்லமாக வெளியேறும். இதனால் பஞ்சர் கடைக்கு செல்லும் வரை தாக்குப்பிடிக்கும்.
2. அதிர்வுகள் ட்யூப் டயரை விட குறைவாக இருக்கும் என்பதால் சொகுசான பயணமாக அமையும்.
3. அதிகப்படியான வெப்பத்தால் டயர் வெடிக்காது.
4. விபத்துகளின் போது டயர் வெடிக்காது என்பதால் மிக சிறப்பான பாதுகாப்பு கிடைக்கும்.
5. மைலேஜ் அதிகரிக்கும் ட்யூப் இல்லை என்பதால் எடை குறையும்.
6. டயர் ஆயுட்காலம் சிறப்பாக இருக்கும்.
ட்யூப்லஸ் டயரில் பராமரிப்பில் சற்று கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.
1. மிக அனுபவமுள்ள மெக்கானிக் கொண்டு பஞ்சர் சரி செய்ய வேண்டும்.
2. டயர் கழற்றும் பொழுது அதற்க்கென உள்ள கருவிகளை பயன்படுத்த வேண்டும்.