சமீபத்தில் விற்பனைக்கு வந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பவர்ஃபுல்லான க்ரூஸர் ரக டோமினார் 400 பைக டாப் ஸ்பீடு மணிக்கு 167 கிமீ என நிருபிக்கப்பட்டுள்ளது. யூடியூப் தளத்தில் இது குறித்தான வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.
பஜாஜ் டோமினார் 400 பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 148 கிமீ என பஜாஜ் தெரிவித்துள்ளது. யூடியூப் தளத்தில் ஹரிராஜன் என்பவர் வெளியிட்டு வீடியோ பதிவில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 167 கிமீ என உறுதிப்படுத்தியுள்ளார்.
டோமினார் 400 என்ஜின்
கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம்பெற்ற அதே 373 சிசி எஞ்சின் டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்துடன் 34.50 hp பவரை 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும். இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. டோமினார் 400 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 148 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.
- என்ஜின் – 373cc
- பவர் – 34.5 bhp @ 8000rpm
- டார்க்: 35Nm @ 8500rpm
- கியர்பாக்ஸ் – 6 வேகம்
- எடை – 182 kg
- எரிபொருள் கலன் – 13 லிட்டர்
மேலும் விபரங்களுக்கு – பஜாஜ் டோமினார் 400 முழுவிபரம்
யூடியூப் வீடியோ –
[youtube https://www.youtube.com/watch?v=XJI648uM0dA]